states

img

உ.பி. சட்டமன்றப் பேரவையில் சாவர்க்கரின் படம் ஒரு அவமானம்.... அகற்றி பாஜக அலுவலகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்....

லக்னோ:
நாட்டில் பிரிவினைவாத இந்துத்துவா விஷக்கருத்துக் களை விதைத்த வி.டி. சாவர்க் கரின் முழுநீளப் படம், உ.பி. சட்டப்பேரவை மாடத்தில் நிறுவப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள் ளது.

விடுதலைப் போராட்டத்தின் போது, “என்மீது இரக்கம்காட்டி சிறையிலிருந்து விடுதலை செய்தால், உயிர் உள்ளவரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள் வேன்” என்று நான்குமுறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததுடன், அதன்படியே கடைசிவரை இருந்தவர் வி.டி. சாவர்க் கர். இந்து மகாசபையின் நிறுவனரான இவர், மகாத்மா காந்திபடுகொலையிலும் குற்றம் சாட்டப்பட்டவர். கொலையாளி நாதுராம் கோட்சேவை உருவாக்கியவர். அப்படிப்பட்டவரின் படம் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை மாடத்தில் இருப்பது அவமானம் என்று காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன.இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்எல்சி, தீபக் சிங், உ.பி. சட்ட மேலவைத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், “பிரிட்டிஷ் அட்டூழியங்களை எதிர்த்து, கடைசிவரை தலைவணங்காமல் போராடிய சிறந்த விடுதலைப் போராளிகளின் படங்கள் இருக்கும் வரிசையில், பிரிட்டிஷாரிடம் ரூ.60மாதாந்திர ஓய்வூதியம் வாங்கியசாவர்க்கரின் படத்தையும் நிறுவுவது, அனைத்து வகையான சித்ரவதைகளையும் தாங்கி, சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடிய அனைத்துதலைவர்களுக்கும் ஒரு அவமானம்” என்றும், “ஆதித்யநாத் அரசானது, சாவர்க்கர் படத்தை உடனே அகற்றி, அதை பாஜகஅலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றும் தீபக் சிங் குறிப்பிட்டுள்ளார்.

;